Melodious Tamil Songs part 1


எங்கே எனது கவிதை
 

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து



எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதைகனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

2.எங்கே என் புன்னகை
 
 

எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

(
எங்கே என்.....)

மழை நீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்த்ய மனம் ஏங்குது
முகிலயில் நனைந்ததை முத்ததால் காயவை
எந்தன் தனிமையை தோள் ச்செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

பனி சிந்திடும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீர் இறங்குமோ
அது காலத்தில் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

3. விடுகதையா இந்த வாழ்க்கை


விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன


விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்?
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே


படம்: முத்து
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்

4.என் உயிர்


என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ

கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ
உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று
விழுந்தது என்ன
மலைதான் கொண்ட
அருவிகள் ரெண்டும்
அழுவதுமென்ன
(மண்ணில்)

When you go when you leave
Then you take a little piece of me with you
There's a hole in my soul
Cause you take a little piece of me with you (x2)

உன் கண்ணில் தானே
நான் பார்த்துக்கொண்டேன்
கண்ணே போனால்
நான் என்ன காண்பேன்
உன் செவியில் தானே
நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால்
யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை
கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா
ஓ நீ வா
(மண்ணின் மேல்)


நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்
இலையோடு வழியும்
மழைநீரைப்போல உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிபோவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்
(மண்ணின் மேல்)

இசை: விஷால் - சேகர்
பாடியவர்: சின்மயி
திரைபடம்: ரா. ஒன்
5. கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை


சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே..)

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
(கண்ணாளனே..)

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில்
நான்ல்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும்
 தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
(கண்ணாளனே..)

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

No comments:

Post a Comment